தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ChatGPT - இது என்ன செய்யும்?

காணொளிக் குறிப்பு, தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ChatGPT - இது என்ன செய்யும்?
தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ChatGPT - இது என்ன செய்யும்?
பிரசுரிக்கப்பட்டது

மனிதனைப் போலவே சிந்தித்து பதில் கூறும் ஒரு மென்பொருளைப் பற்றிய பேச்சை கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக தொழில்நுட்ப உலகில் அதிகமாகக் கேட்க முடிகிறது. அதன் பெயர் ChatGPT

இதற்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்று பலரும் வியந்து கூறுகிறார்கள். உலகின் வருங்காலம் இதுதான் என்கிறார்கள். சற்று அதிகப்படியானதாக இருந்தாலும், இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.

கல்வி, வேலை வாய்ப்பு, பொழுதுபோக்கு, சினிமா, இலக்கியம் என அனைத்திலும் இதைப் பயன்படுத்த முடியும்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் மனிதனைப் போன்றே பதில்களைத் தருகிறது. புரியாதவற்றை விளக்குகிறது. சில பிழைகளும் குறைகளும் இருந்தாலும், இதன் திறனும் எதிர்காலத்தில் மேம்படுத்தப்படக்கூடிய வாய்ப்புகளும் உண்மையிலேயே வியக்க வைக்கிறது. இன்னொரு பக்கம் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

 ChatGPT

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: