அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது ஏன்? வழக்கின் பின்னணி
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகப் பதிவான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாகத் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில், அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் , கடந்த செப்டம்பர் 16 ஆம் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சென்னையில் அவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



