நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு காலக்கெடுவா? டிரம்ப் பதில் என்ன?
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி-ல் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு காலக்கெடு நிர்ணயிப்பீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "விரைவில் நிர்ணயிப்போம். சில சந்திப்புகள் நல்லவிதமாக இருந்தன. இஸ்ரேலைச் சுற்றியுள்ள இஸ்லாமிய, அரபு மற்றும் பலருடனும், ஹமாஸுடனும் சந்திப்புகள் நல்லவிதமாக அமைந்தன. அவை பலன் தரும் போல தெரிகிறது. சிறிது காத்திருந்து என்ன ஆகின்றது என்று பார்ப்போம்." என பதிலளித்தார்.
பின் காலக்கெடு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் என்ன பதிலளித்தார். முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு