மடிக்கக்கூடிய ஐபோனின் திரையில் கோளாறு - மாற்றித் தரப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

காணொளிக் குறிப்பு, ஐபோன் டியோ திரையில் கோளாறு மாற்றித் தருவதாக ஆப்பிள் அறிவிப்பு
மடிக்கக்கூடிய ஐபோனின் திரையில் கோளாறு - மாற்றித் தரப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு
பிரசுரிக்கப்பட்டது

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டியோ -ஐ கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.2 லட்சத்து 99 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது.

வெளியான சில நாட்களிலேயே, ஸ்மார்ட்போன் திரையில் பிரச்னைகள் ஏற்படடுவதாக வாடிக்கையாளர்கள் பலரும் குற்றம்சாட்டினர். திரையில் கோடுகள் தென்படுவதாகவும், சிலர் சிலர் செல்போனை திறக்கும்போது நொறுங்குவது போன்ற சத்தம் கேட்பதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் கோளாறு ஏற்பட்டுள்ள ஸ்மாட்போன்களை மாற்றித் தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்மாட்ர்போன்களின் உள் திரையில் சிறிய எண்ணிக்கையிலான சாதனங்களைப் பாதிக்கும் பிரச்னை இருப்பதை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையால் எத்தனை கைப்பேசிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இதுவரை வெளியிடப்பட்ட ஐபோன்களிலேயே மிகவும் அதிக விலையுடைய ஸ்மார்ட்போனாக ஐபோன் டியோ உள்ளது. சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ஐபோனின் வடிவமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் பெரிய மாற்றமாக இது கருதப்படுகிறது.

ஆப்பிளின் போட்டி நிறுவனங்கள் தயாரித்த மடக்கு ஸ்மாட்ர்போன்களிலும் இதுபோன்ற குறைபாடுகள் முன்பு ஏற்பட்டுள்ளன. உதாரணமாக 2019-ல் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான Galaxy Fold ஆரம்பத்திலேயே பின்னடைவைச் சந்தித்ததாக தொழில்நுட்ப விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு