நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
'அணையாத தீப்பிழம்பு' - இந்தியாவுடன் தொடர்புடைய அசர்பைஜான் கோவிலின் வரலாறு தெரியுமா?
அசர்பைஜான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெள்ளிக்கிழமை அசர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள அடேஷ்கா அக்னி கோயிலுக்கு சென்றார்.
அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த ஜெய்சங்கர், இந்த கோவில் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளின் அடையாளமாக விளங்குகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
அசர்பைஜான் காஸ்பியன் சீ கரையில் அமைந்துள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு சிறிய நாடு. முன்னதாக இது சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
சுரகானி அருகே அமைந்துள்ள அடேஷ்கா அக்னி கோயிலில் தேவநாகரி எழுத்துகளில் ஸ்ரீ கணேஷாய நமஹ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து மதத்தின் அக்னி கடவுளான ஜ்வாலா ஜி உள்ளிட்ட பிற தெய்வங்களை போற்றும் வகையில் தேவநாகரி எழுத்துகளில் மேலும் ஐந்து வரிகள் இடம்பெற்றுள்ளன.
பாகுவில் உள்ள இந்திய தூதரகத்தின் தகவலின்படி, அடேஷ்கா கோயிலில் தேவநாகரி எழுத்துகளில் 18 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை விநாயகரை போற்றும் வாசகங்களுடன் தொடங்குகின்றன. ஜ்வாலா ஜி பற்றிய குறிப்புகள் பத்துக்கும் மேற்பட்ட முறை இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலின் வரலாறு என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு