நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: ஃபைனான்ஸ் இன்ஃப்ளுயன்சர் ஹரிஷ் மரணம்: பின்னணி என்ன?
(காணொளியில் தற்கொலை பற்றிய விவரணைகள் உள்ளன.)
சென்னையில் பிரபல ஃபைனான்ஸ் இன்ஃப்ளுயன்சராக இயங்கி வந்த ஹரிஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செபி (SEBI) உரிமம் இல்லாமல் முதலீடு தொடர்பான கருத்துகளைப் பரப்பியதாக எழுந்த புகார்களை அடுத்து, மெட்டா நிறுவனம் ஹரிஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியிருந்தது.
இத்தகைய சூழலில், சைபர் புல்லிங் மற்றும் இணையவழி அவதூறுகள் காரணமாகவே தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாக ஹரிஷின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காணத்தூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஹரிஷிடம் லைசென்ஸ் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பியதாக யூடியூபர் ஜேசன் சாமுவேல் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
முதலீடு மற்றும் பங்குச்சந்தை குறித்த பொதுவான தகவல்களை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்றாலும், குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதற்கு செபி மற்றும் தேசிய பங்கு சந்தை நிறுவனத்தின் முறையான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என பொருளாதார நிபுணர் வா. நாகப்பன் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு