நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
நெல்லையில் கணவனை இழந்த பெண்னை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த நால்வர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உடலில் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்னை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால் தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அந்த பெண் வேலைக்காக தினமும் சங்கரன்கோவிலில் இருந்து பேருந்தில் திருநெல்வேலி சென்று வந்துள்ளார்.
அப்போது வண்ணார்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன்(44) என்பவருடன் அந்த பெண்ணுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காலையில் அந்த பெண்ணை நெல்லை மாநகர பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு ஆட்டோ டிரைவர் முருகன் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு அவரது நண்பர்களான வண்ணார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(32), பேராட்சி(31), அய்யாசாமி ஆகியோரை ஆட்டோ டிரைவர் முருகன் அழைத்துள்ளார்.
பின்னர் 4 பேரும் சேர்ந்து பெண்னை அடித்து துன்புறுத்தி கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அந்த பெண் மிகவும் சோர்வடைந்த நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் உடலில் பல இடங்களில் ஏற்பட்ட பலத்த காயத்தால் வலி அதிகரித்ததால், அந்த பெண் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 4 பேர் மீதும் பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் முருகன் உள்பட நல்வரையும் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்