காணொளி: H5N1 பறவை காய்ச்சல் பாதிப்பு - வண்டலூர் பூங்கா மூடல்

காணொளி: H5N1 பறவை காய்ச்சல் பாதிப்பு - வண்டலூர் பூங்கா மூடல்
பிரசுரிக்கப்பட்டது

சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள நீர் வாழ் பறவைகளுக்கு H5N1 பறவை காய்ச்சல் உறுதி செய்யபட்டதை அடுத்து, அக்டோபர் 22, 23 என 2 நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகளுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பதை போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுவரை பறவைகள் உயிரிழப்பு ஏதும் கண்டறியப்படாத நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த 2 நாட்களில் பறவைகள் வாழ்விடங்களை சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல், உயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன. பறவை காய்ச்சல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு மீண்டும் பூங்கா திறக்கப்படும் என பூங்கா நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு