'காலை 5.30 மணிக்கு கைது பண்ணாங்க' - தாராபுரம் நாதக வேட்பாளர் கூறியது என்ன?
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கார்த்திகா உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட காட்சி இது.
கடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கார்த்திகா தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
அக்டோபர் 4ஆம் தேதி அன்று தாராபுரத்தில் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நடைபெறும் பகுதியில் பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் காவலில் எடுக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது இதில் தொடர்புடைய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, தாராபுரம் பகுதி நிர்வாகிகள் சூர்யா, ஷேக் பரித், கந்தசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தாராபுரம் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.
காவல்நிலைய வளாகத்தில் பேசிய கார்த்திகா, "எதற்கு கைது செய்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. காலை 5:30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த போது கைது செய்துள்ளார்கள்." என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இவர்களின் கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"அதிகார துஷ்பிரயோகம் செய்தத அரசை தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளும் கார்த்திகா கைதை கண்டித்துள்ளன.
மறுபுறம் காவல்துறையைக் கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணிப் பிரிவு பொறுப்பாளர் நன்மாறன் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



