நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காவலருடனான தள்ளுமுள்ளு: தடுக்கி விழுந்த ஆந்திர முன்னாள் அமைச்சர்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விடதல ரஜினியை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர் கீழே விழுந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான் ரஜினி கீழே விழுந்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சிலகலூரிபேட்டையில் முன்னாள் அமைச்சர் விடுதல ரஜினியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், தங்கள் கட்சித் தலைவர்களைச் சந்திக்கவிடாமல் தடுப்பது ஏன் என்று விடுதல ரஜினி காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு