ராணி இரண்டாம் எலிசபெத்தின் விளையாட்டுத் துறை ஆர்வம்: புகைப்படங்கள்

பிரசுரிக்கப்பட்டது

ராணி தனது வாழ்வில் விளையாட்டு மீது காட்டிய ஆர்வத்தை நினைவுகூரும் படங்கள்.

குதிரையின்மீது ராணி
படக்குறிப்பு, ராணிக்கு முதல் குதிரை, பெக்கி என்று பெயரிடப்பட்ட ஷெட்லாண்ட் மட்டக்குதிரை, நான்கு வயதில் வழங்கப்பட்டது. அவர் ஆறு வயதிற்குள் சவாரி செய்யத் தொடங்கினார். அவரது பதின்ம வயதுக்குள் ஒரு திறமையான குதிரையேற்றம் செய்பவராக இருந்தார். மேலும் 1952ல் ட்ரூப்பிங் தி கலரில் அரசியாக முதன்முறையாக இங்கு சவாரி செய்த காட்சி இந்தப் படம்.
ராணியும் இளவரசி மார்கரெட்டும்
படக்குறிப்பு, ராணியின் குதிரைகள் மீதான காதல் அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது. அவர் தொடர்ந்து குதிரைப் பந்தயங்களில் கலந்து கொண்டார். இங்கே அவர் இளைய சகோதரி இளவரசி மார்கரெட்டுடன் எப்ஸமியில் நடந்த 1950 டெர்பியில் கலந்து கொண்டார்.
ராணி மற்றும் அல்தியா கிப்சன்
படக்குறிப்பு, 1957இல், ராணி விம்பிள்டன் ஒற்றையர் SW19 விளையாட்டில் வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கரான அல்தியா கிப்சனுக்கு பட்டத்தை வழங்கினார்.
ராணி எஃப்ஏ கோப்பையை நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்ட் கேப்டன் ஜேக் புர்கிட்டுக்கு 1959ஆம் ஆண்டு வழங்குகிறார்
படக்குறிப்பு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராணி வெம்ப்லியில் கால்பந்து எஃப்ஏ கோப்பை இறுதிப் போட்டியில் கலந்துகொண்டார். நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்ட் 2-1 என்ற கோல் கணக்கில் லூட்டனை வீழ்த்தி, வெற்றி பெற்றபோது, அதன் கேப்டன் ஜேக் புர்கிட்டிடம் கோப்பையை வழங்கினார்.
ராணி 1966 உலகக் கோப்பையை பாபி மூருக்கு வழங்கினார்
படக்குறிப்பு, வெம்ப்லியில் ராணியின் மிகச் சிறந்த தருணம், 1966ஆம் ஆண்டில், மேற்கு ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து 4-2 கோல் கணக்கிலான உலகக் கோப்பை இறுதி வெற்றிக்குப் பிறகு, ஜூல்ஸ் ரிமெட் டிராஃபியை பாபி மூருக்கு வழங்கினார்.
ராணி மற்றும் விர்ஜினீயா வேட்
படக்குறிப்பு, 1977 ராணிக்கு ஒரு சிறப்புமிக்க ஆண்டு. அவர் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடினார். அதோடு விம்பிள்டனில் பெண்கள் ஒற்றையர் இறுதி நாளில் விர்ஜீனியா வேட் பட்டத்தை வென்றபோது அங்கிருந்தார்.
ராணி மற்றும் ஜர்கென் கிளின்ஸ்மேன்
படக்குறிப்பு, ஜெர்மனிக்கும் செக் குடியரசுக்கும் இடையே வெம்ப்லியில் நடந்த யூரோ 96 இறுதிப் போட்டியில் ராணி கலந்து கொண்டார். ஜர்கென் கிளின்ஸ்மேன் தலைமையிலான ஜெர்மனி அணி சாம்பியன் ஆனது
ராணியுடன், டேவிட் பெக்ஹாம் மற்றும் கிர்ஸ்டி ஹோவர்
படக்குறிப்பு, மான்செஸ்டரில் 2002 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் டேவிட் பெக்காம் மற்றும் நிதி திரட்டுபவர் கிர்ஸ்டி ஹோவர்ட் ஆகியோர் ராணிக்கு ஜூபிலி பேட்டன் வழங்கினர்.
ஸ்லோவாக்கியாவில் கில்ட்ஃபோர்ட் ஃபிளேம்ஸ், அக்வாசிட்டி போப்ராட் இடையேயான போட்டிக்கு முன் ராணி ஒரு ஐஸ் ஹாக்கி பக் போடுகிறார்
படக்குறிப்பு, 2008இல் ஸ்லோவேனியாவின் சுற்றுப்பயணத்தில், கில்ட்ஃபோர்ட் ஃபிளேம்ஸ், அக்வாசிட்டி போப்ராட் இடையேயான ஐஸ் ஹாக்கி போட்டியில் சம்பிரதாயமான பக் டிராப் செய்ய ராணி அழைக்கப்பட்டார்.
2012 ஒலிம்பிக்ஸில் ராணி
படக்குறிப்பு, 2012 ஒலிம்பிக் தொடக்க விழாவில் ராணி முக்கியப் பங்கு வகித்தார். ஜேம்ஸ் பாண்டுடன் (டேனியல் கிரெய்க்) ஒரு குறும்படத்தில் நடித்தார். பின்னர் அவர் முறைப்படி விளையாட்டுப் போட்டிகளைத் திறந்து வைத்தார்
ராணி டேன்னி கிரே-தாம்சனுடன்
படக்குறிப்பு, ராணி அதிகாரபூர்வமாக 2012 பாராலிம்பிக்ஸை தொடக்கி வைத்தபோது 11 முறை பாராலிம்பிக் சாம்பியனான பரோனஸ் டேன்னி கிரே-தாம்சனை சந்தித்தார்.
ராணியுடன் பந்தயக் குதிரை ஓட்டும் ஜாக்கி ரையான் மூர்
படக்குறிப்பு, ராணியின் குதிரை எஸ்டிமேட் மற்றும் அதை ஓட்டிய பந்தயக் குதிரை ஓட்டுபவரான ஜாக்கி ரையான் மூர் 2013இல் ராயல் அஸ்காட்டில் தங்கக் கோப்பையை வென்றது. 207 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவர் வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளராக இருந்தது அதுவே முதல் முறை.
2013ஆம் ஆண்டு தங்கக் கோப்பையை வென்ற எஸ்டிமேட் குதிரையை ராணி தடவிக் கொடுக்கிறார்
படக்குறிப்பு, அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் ராணியின் மிகவும் வெற்றிகரமான குதிரைகளில் ஒன்று எஸ்டிமேட்
2015 ரக்பி உலகக் கோப்பைக்கு முன்பு, ராணியுடன் பிரையன் ஹபானாவும் ஹென்றி ஸ்பெய்ட்டும்
படக்குறிப்பு, ராணி 2015 ரக்பி உலகக் கோப்பைக்கு முன் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்காவின் பிரையன் ஹபானா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஹென்றி ஸ்பெய்ட்டை சந்தித்தார்.
ராணியுடன் ரையன் மூர்
படக்குறிப்பு, 2016இல் ராயல் அஸ்காட்டில் டயமண்ட் ஜூபிலி பங்குகளை மவுண்ட் ட்வைலைட் சன் வென்ற பிறகு, சிறந்த ஜாக்கியான ரியான் மூர் ராணியுடன் உரையாடினார்.
ராணியுடன் இருமுறை ஒலிம்பிக் சாம்பியனான நிக்கோலா ஆடம்ஸ்
படக்குறிப்பு, 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் குத்துச்சண்டை சாம்பியனான நிக்கோலா ஆடம்ஸ் உட்பட பதக்கம் வென்றவர்களுக்கு ராணி பக்கிங்ஹாம் மாளிகையில் அளித்த வரவேற்பு நிகழ்ச்சி.
2017 ராயல் அஸ்காட்டில் ராணி
படக்குறிப்பு, 2017ல், ராணி மீண்டும் ராயல் அஸ்காட்டில் கலந்து கொண்டார். அதோடு மரபுவழி கேரேஜ் வண்டி அணிவகுப்பு நிகழ்விலும் பங்கேற்றார்.
ராணி தொடர்ந்து ராயல் அஸ்காட்டில் கலந்து கொண்டார். ஜூன்2021 இல் பெர்க்ஷையர் குதிரைப்பந்தய மைதானத்தில் நடந்த போட்டியைக் கண்டு மகிழ்ந்தார்.
படக்குறிப்பு, ராணி தொடர்ந்து ராயல் அஸ்காட்டில் கலந்து கொண்டார். ஜூன்2021 இல் பெர்க்ஷையர் குதிரைப்பந்தய மைதானத்தில் நடந்த போட்டியைக் கண்டு மகிழ்ந்தார்.
இந்த கோடையில் பர்மிங்ஹாமில் நடைபெறும் நிகழ்வுக்கு முன்னதாக, அக்டோபர் 2021இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் உலகளாவிய ரிலேவை ராணி தொக்கி வைத்தார். பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற கதீனா காக்ஸுக்கு அவர் அதைக் கொடுத்தார். அவர் தனது பயணத்தின் முதல் கட்டத்தில் அதை எடுத்துச் சென்றார்.
படக்குறிப்பு, இந்த கோடையில் பர்மிங்ஹாமில் நடைபெறும் நிகழ்வுக்கு முன்னதாக, அக்டோபர் 2021இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் உலகளாவிய ரிலேவை ராணி தொக்கி வைத்தார். பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற கதீனா காக்ஸுக்கு அவர் ரிலேவை கொடுத்தார். அவர் தனது பயணத்தின் முதல் கட்டத்தில் அதை எடுத்துச் சென்றார்.