அரசர் மூன்றாம் சார்ல்ஸ் வாழ்க்கையின் படங்கள்

அரசர் மூன்றாம் சார்ல்ஸ், 60வது பிறந்தநாளில்
பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டன் அரியணைக்கான வாரிசாக நீண்ட காலம் இருந்த சார்ல்ஸ் இப்போது அரசராகிவிட்டார். இதுவரை பிரிட்டிஷ் அரியணைக்கு வந்தவர்களில், அதிக வயதில் புதிய அரசராகப் பொறுப்பேற்றவர் இவர்தான். இப்போது இவருக்கு வயது 73. மூன்றாம் சார்ல்ஸின் வாழ்க்கையை வடிவமைத்த சில முக்கியத் தருணங்கள் இதோ...

1px transparent line
சார்ல்ஸ் ஃபிலிப் ஆர்தர் ஜார்ஜ் நவம்பர் 14, 1948இல் பிறந்தார், அவருடைய தாயார் ராணியாக முடிசூட்டப்பட்டபோது அவருக்கு மூன்று வயதுதான்.
படக்குறிப்பு, சார்ல்ஸ் ஃபிலிப் ஆர்தர் ஜார்ஜ் நவம்பர் 14, 1948இல் பிறந்தார். அவருடைய தாயார் ராணியாக முடிசூட்டப்பட்டபோது அவருக்கு மூன்று வயதுதான்.
1px transparent line
இங்கிலாந்தின் இளவரசி எலிசபெத், அவரது கணவர் இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகன், குழந்தை சார்லஸுடன் ஜூலை 1949இல் சர்ரே, விண்டில்ஷாம் மூரில்
படக்குறிப்பு, கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய இளவரசர் ஃபிலிப்புடன் இருப்பதற்காக ராணி மால்டாவுக்கு சென்றபோது, அவரது பெற்றோருக்கும் சார்ல்ஸுக்கும் ஏற்பட்ட தொடர் பிரிவுகளில் முதல் பிரிவை அவர் அனுபவித்தபோது அவருக்கு ஒரு வயதுதான்.
பெற்றோரிடமிருந்து பிரிந்திருக்கும் போது இளம் சார்ல்ஸ் பெரும்பாலும் நர்சரி ஊழியர்களின் பராமரிப்பில் விடப்பட்டார்
படக்குறிப்பு, பெற்றோரிடமிருந்து பிரிந்திருக்கும் போது இளம் சார்ல்ஸ் பெரும்பாலும் நர்சரி ஊழியர்களின் பராமரிப்பில் விடப்பட்டார்
1px transparent line
1957இல் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் கால்பந்து விளையாடியபோது
படக்குறிப்பு, எட்டு வயது வரை வீட்டிலேயே கல்வி கற்ற சார்ல்ஸ், பிறகு பள்ளிக்குச் சென்றார். அதோடு பள்ளிக்குச் செல்லும் முதல் அரியணை வாரிசாகவும் ஆனார் - இங்கே அவர் 1957இல் கால்பந்து விளையாடியபோது எடுக்கப்பட்ட படம்
அவர் தனது பாட்டியான ராணியின் தாயாருடன் நெருக்கமான உறவைக் கடைபிடித்தார்
படக்குறிப்பு, அவர் தனது பாட்டியான ராணியின் தாயாருடன் நெருக்கமான உறவைக் கடைபிடித்தார்
1px transparent line
ராணி இரண்டாம் எலிசபெத் சார்ல்ஸின் கடைசி நாளான 31 ஜூலை 1967 அன்று கோர்டன்ஸ்டவுன் பள்ளியில் சார்லஸை சந்தித்தார்.
படக்குறிப்பு, அவரை உறுதியுள்ளவராக்கும் நடவடிக்கையாக, ஸ்காட்லாந்தில் உள்ள கோர்டன்ஸ்டவுனில் தனது பள்ளிப் படிப்பை முடிக்க சார்ல்ஸ் அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு அவர் சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்டார். அங்கிருந்து தான் வெளியேற அனுமதிக்குமாறு தனது பெற்றோரிடம் கெஞ்சினார்.
1px transparent line
அரசர் மூன்றாம் சார்ல்ஸ், டிரினிட்டி கல்லூரியில் தனது படிப்பறையில், 1969 மே மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம்
படக்குறிப்பு, சார்ல்ஸ் முதலில் தொல்லியல், மானுடவியல், பிறகு வரலாறு ஆகிய துறைகளில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் படித்தார் - பட்டப்படிப்பை முடித்த அரியணையின் முதல் வாரிசு இவர் தான்
ஜூலை 1969இல், கேர்னார்ஃபோன் கோட்டையில் நடைபெற்ற விழாவில் சார்ல்ஸ் வேல்ஸ் இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார், வெல்ஷ் மற்றும் ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார்.
படக்குறிப்பு, ஜூலை 1969இல், கேர்னார்ஃபோன் கோட்டையில் நடைபெற்ற விழாவில் சார்ல்ஸ் வேல்ஸ் இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார். அவர் வெல்ஷ் மற்றும் ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார்.
அவர் ராணுவ சேவையின் குடும்ப பாரம்பர்யத்தைப் பின்பற்றினார். டார்ட்மவுத்தில் உள்ள ராயல் கடற்படை கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பு ராயல் விமானப் படையில் கிரான்வெல்லில் விமானியாகத் தகுதி பெற்றார்.
படக்குறிப்பு, அவர் ராணுவ சேவையின் குடும்ப பாரம்பரியத்தைப் பின்பற்றினார். டார்ட்மவுத்தில் உள்ள ராயல் கடற்படை கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பு கிரான்வெல்லில் ராயல் விமானப் படையின் விமானியாகத் தகுதி பெற்றார்.
அரசர் சார்ல்ஸ் III டெவோனில் உள்ள லிம்ப்ஸ்டோனில் உள்ள ராயல் மெரைன் பயிற்சி மையத்தில் ஒரு தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டு, 13 ஜனவரி 1975இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்
படக்குறிப்பு, அவர் கடுமையான ராணுவப் பயிற்சியை மேற்கொண்டார். அவர் தொடர்ச்சியான ராணுவப் பயிற்சிகளில் தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொண்டதால் "அதிரடி நாயகன்" என்ற பட்டத்தையும் பெற்றார். நீர்மூழ்கிக் கப்பல்களில் பயிற்சி பெற்றவர், பிறகு முக்குளிப்பவராகவும் கமாண்டோவாகவும் பயிற்சி பெற்றார்.
இளவரசர் சார்ல்ஸ், எச்.எம்.எஸ் ப்ரோனிங்டன் கப்பில் ஏறும் தருணம், 9 பிப்ரவரி, 1976
படக்குறிப்பு, பல்வேறு கப்பல்களில் சேவை செய்த பிறகு, ராயல் கடற்படையில் அவர் பணியாற்றிய இறுதிக் காலத்தில் மேன் ஹன்டர் எச்.எம்.எஸ் ப்ரோனிங்டன் கப்பலின் அதிகாரத்தை சார்ல்ஸ் ஏற்றுக்கொண்டார்.
1px transparent line
அவர் தனது 30வது பிறந்தநாளை நெருங்கியபோது, வேல்ஸ் இளவரசர் ஒரு ப்ளேபாயை போன்றவர் என்று அறியப்பட்டார்
படக்குறிப்பு, தனது 30வது பிறந்தநாளை நெருங்கியபோது, வேல்ஸ் இளவரசர் ஒரு ப்ளேபாயை போன்றவராக அறியப்பட்டார்
உலகின் மிகவும் தகுதியான இளைஞர்களில் ஒருவராக, அவர் போலோ, நீச்சல் மற்றும் விண்ட்சர்ஃபிங் விளையாடும் புகைப்படம்
படக்குறிப்பு, உலகின் மிகவும் தகுதியான இளைஞர்களில் ஒருவராக, அவர் போலோ, நீச்சல் மற்றும் விண்ட்சர்ஃபிங் விளையாடும் புகைப்படம், 1979
அவர் கமில்லா பார்க்கர் பவுல்ஸ் உட்பட பல பெண்களுடன் காதல் உறவில் இருந்ததாகத் தொடர்புபடுத்தப்பட்டார்
படக்குறிப்பு, அவர் கமில்லா பார்க்கர் பவுல்ஸ் உட்பட பல பெண்களுடன் காதல் உறவில் இருந்ததாகத் தொடர்புபடுத்தப்பட்டார் - 1972ஆம் ஆண்டு போலோ விளையாடிய பிறகு கமில்லா பார்க்கர் பவுல்ஸ் உடன்
அரசர் மூன்றாம் சார்ல்ஸ், அரச குடும்ப சுற்றுப்பயணத்தின்போது ஃபிஜியில் ஒரு பெண்ணுடன் நடனமாடுகிறார்
படக்குறிப்பு, அந்த நேரத்தில் இளவரசருக்கு சரியான வேலையைக் கண்டறிவது குறித்து நிறைய விவாதங்கள் இருந்தபோதிலும், அவர் பல அரச குடும்ப சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். அதோடு தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டார். 1976இல் தனது பிரின்ஸ் அறக்கட்டளையை உருவாக்கினார்.
1981ஆம் ஆண்டில், ஊடகங்களின் தீவிர ஊகங்களுக்குப் பிறகு, லேடி டயானா ஸ்பென்சருடன் சார்ல்ஸுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
படக்குறிப்பு, 1981ஆம் ஆண்டில், லேடி டயானா ஸ்பென்சருடன் சார்ல்ஸுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
1px transparent line
ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவர்கள் செயின்ட் பால் தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டனர் - திருமண நாளில் அவர்களைப் பார்க்க 600,000 மக்கள் லண்டன் தெருக்களில் நிரம்பி வழிந்தனர்
படக்குறிப்பு, ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவர்கள் செயின்ட் பால் தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டனர் - திருமண நாளில் அவர்களைப் பார்க்க 6,00,000 மக்கள் லண்டன் தெருக்களில் நிரம்பி வழிந்தனர்
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையின் மைதானத்தில் உள்ள டீ ஆற்றின் கரையில், தேனிலவின் இறுதிக் கட்டத்தின் போது தம்பதி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
படக்குறிப்பு, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையின் மைதானத்தில் உள்ள டீ ஆற்றின் கரையில், தேனிலவின் இறுதிக் கட்டத்தின் போது தம்பதி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
1982இல் இளவரசர் வில்லியம், 1984இல் அவரது இளைய சகோதரர் இளவரசர் ஹேரி ஆகிய இரு குழந்தைகளின் வருகை இருந்தபோதிலும், அவர்களின் திருமணம் சிக்கலில் இருந்தது. சார்ல்ஸ் மற்றும் டயானா ஜூலை 1996இல் முறைப்படி "சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகளை" காரணம் காட்டி விவாகரத்து செய்தனர்.
படக்குறிப்பு, 1982இல் இளவரசர் வில்லியம், 1984இல் அவரது இளைய சகோதரர் இளவரசர் ஹேரி ஆகிய இரு குழந்தைகளின் வருகை இருந்தபோதிலும், அவர்களின் திருமணம் சிக்கலில் இருந்தது. சார்ல்ஸ் மற்றும் டயானா ஜூலை 1996இல் முறைப்படி "சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகளை" காரணம் காட்டி விவாகரத்து செய்தனர்.
1997இல் பாரிஸில் கார் விபத்தில் டயானா திடீரென இறந்ததைத் தொடர்ந்து, அவருக்கு அரச குடும்ப இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும் என்று சார்ல்ஸ் வலியுறுத்தினார்.
படக்குறிப்பு, 1997இல் பாரிஸில் கார் விபத்தில் டயானா திடீரென இறந்ததைத் தொடர்ந்து, அவருக்கு அரச குடும்ப இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும் என்று சார்ல்ஸ் வலியுறுத்தினார்.
டயானாவின் மரணம் முடியாட்சியை அதன் தோற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கட்டாயப்படுத்தியது. மேலும் சார்ல்ஸ் விரைவில் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அக்கறையுள்ள, ஆதரவான தந்தையாக, நவீன வாரிசாக உருவெடுத்தார்.
படக்குறிப்பு, டயானாவின் மரணம் முடியாட்சியை அதன் தோற்றத்தை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியது. மேலும் சார்ல்ஸ் விரைவில் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அக்கறையுள்ள, ஆதரவான தந்தையாக, நவீன வாரிசாக உருவெடுத்தார்.
டயானாவின் மரணத்திற்குப் பிறகு வெளியுலகத் தொடர்பற்றவர் மற்றும் உணர்ச்சியற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட சார்ல்ஸ் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கும் பொருட்டு மக்களுடன் தன்னை இணைத்துக்கொள்ள முயன்றார்
படக்குறிப்பு, டயானாவின் மரணத்திற்குப் பிறகு வெளியுலகத் தொடர்பற்றவர், உணர்ச்சியற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட சார்ல்ஸ் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கும் பொருட்டு மக்களுடன் தன்னை இணைத்துக்கொள்ள முயன்றார்
இயற்கை முறை விவசாயம், மாற்று மருத்துவத்திற்கான ஆதரவு, மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் என்று பல விஷயங்களில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
படக்குறிப்பு, இயற்கை முறை விவசாயம், மாற்று மருத்துவத்திற்கான ஆதரவு, மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் என்று பல விஷயங்களில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
நவீன கட்டடக்கலையின் மீது விமர்சனங்களைக் கொண்டவர். இவருடைய சிந்தனையால், டோர்செட்டில் உள்ள பவுண்ட்பரி கிராமத்தின் நகர திட்டமிடல் ஓர் உறுதியான வடிவத்தை அடைந்தது.
படக்குறிப்பு, நவீன கட்டடக்கலையின் மீது விமர்சனங்களைக் கொண்டவர். இவருடைய சிந்தனையால், டோர்செட்டில் உள்ள பவுண்ட்பரி கிராமத்தின் நகர திட்டமிடல் ஓர் உறுதியான வடிவத்தை அடைந்தது.
2002ஆம் ஆண்டில், தனது 101 வயதில் தூக்கத்தில் அமைதியாக உயிரிழந்த அவரது "அற்புதமான" பாட்டி - ராணியின் தாயார் - பற்றி உணர்ச்சி பொங்கப் பேசினார். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அவரது சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அருகே அவர் அமைதியாக நின்றிருந்தார்.
படக்குறிப்பு, 2002ஆம் ஆண்டில், தனது 101 வயதில் தூக்கத்தில் அமைதியாக உயிரிழந்த அவரது "அற்புதமான" பாட்டி - ராணியின் தாயார் - பற்றி உணர்ச்சி பொங்கப் பேசினார். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அவரது சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அருகே அவர் அமைதியாக நின்றிருந்தார்.
1px transparent line
பல ஆண்டுகளாக சார்ல்ஸ் கமிலா பார்க்கர் பவுல்ஸுடன் இருந்த உறவைப் பேணி வந்தார். 1970இல் முதன்முதலில் சந்தித்த இவர்கள் இருவரும் 2005இல் தங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிவித்தனர்.
படக்குறிப்பு, பல ஆண்டுகளாக சார்ல்ஸ் கமிலா பார்க்கர் பவுல்ஸுடன் தனது உறவைப் பேணி வந்தார். 1970இல் முதன்முதலில் சந்தித்த இவர்கள் இருவரும் 2005இல் தங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிவித்தனர்.
ஒரு சிவில் விழாவில் திருமணம் செய்து கொண்ட அரச குடும்பத்தின் முதல் உறுப்பினர் அவர்தான். திருமதி பார்க்கர் பவுல்ஸ் கார்ன்வாலின் சீமாட்டி ஆனார். சார்ல்ஸின் அரியணைக்கு வந்த பிறகு அவர் ராணி ஆனார்.
படக்குறிப்பு, ஒரு சிவில் விழாவில் திருமணம் செய்து கொண்ட அரச குடும்பத்தின் முதல் உறுப்பினர் அவர்தான். கமில்லா பார்க்கர் பவுல்ஸ் கார்ன்வாலின் சீமாட்டி ஆனார். சார்ல்ஸின் அரியணைக்கு வந்த பிறகு அவர் ராணி ஆனார்.
2011இல், அவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கேட் மிடில்டனை மணந்தார்.
படக்குறிப்பு, 2011இல், அவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கேட் மிடில்டனை மணந்தார்.
மன்னரின் முதல் பேரக்குழந்தைகள் இளவரசர் ஜார்ஜ், இளவரசி ஷார்லோட் 2013, 2015இல் பிறந்தனர்.
படக்குறிப்பு, அரசரின் முதல் பேரக்குழந்தைகள் இளவரசர் ஜார்ஜ், இளவரசி ஷார்லோட் இருவரும் 2013 மற்றும் 2015இல் பிறந்தனர்.
அரசர் மூன்றாம் சார்ல்ஸ், 2018இல் இளவரசர் ஹேரி-மேகன் திருமணத்தில் மேகன் மார்க்கலை இடைகழியில் அழைத்துச் சென்றார்
படக்குறிப்பு, அரசர் மூன்றாம் சார்ல்ஸ், 2018இல் இளவரசர் ஹேரி-மேகன் திருமணத்தில் மேகன் மார்க்கலை இடைகழியில் அழைத்துச் சென்றார்
1px transparent line
2021இல் தனது தந்தை இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கின்போது இளவரசர் சார்ல்ஸ் தந்தையின் இழப்பால் வருத்தத்தில் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது
படக்குறிப்பு, 2021இல் தனது தந்தை இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கின்போது இளவரசர் சார்ல்ஸ் தந்தையின் இழப்பால் வருத்தத்தில் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது
1px transparent line
அரச குடும்பம் தொடர்பான மீதான மக்களின் அணுகுமுறை மாறிவரும் நேரத்தில் சார்ல்ஸ் மன்னராக மாறியுள்ளார்
படக்குறிப்பு, அரச குடும்பம் தொடர்பான மக்களின் அணுகுமுறை மாறிவரும் நேரத்தில் சார்ல்ஸ் அரசராகியுள்ளார்
1px transparent line

அனைத்து படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை.