டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணி - ஆதரவாளர்கள் திரளாக பங்கேற்பு
டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணி - ஆதரவாளர்கள் திரளாக பங்கேற்பு
பிரசுரிக்கப்பட்டது
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 'டெல்லி செல்வோம்' என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் திரண்டனர்.
மிண்டோ சாலை - கன்னாட் பிளேஸ் சந்திப்பிலிருந்து தொடங்கிய பேரணி, ராம்லீலா மைதானத்தை நோக்கிச் சென்றது.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெறுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் என முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



