பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை 3 கிமீ சுமந்து சென்ற உறவினர்கள்
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை 3 கிமீ சுமந்து சென்ற உறவினர்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி மாவட்டத்தில், பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணியை, சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் ஸ்ட்ரெச்சரில் சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிடிஐ செய்தி வெளியிட்ட தகவலின்படி, அரக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனந்தகிரி மண்டலத்தின் தலாரிபாடு கிராமத்தைச் சேர்ந்த கில்லோ நீலிமா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஆனால், அந்த கிராமத்தில் சரியான சாலை வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் அவரை ஸ்ட்ரெச்சரில் சுமந்தபடி மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொட்டபாடு கிராமம் வரை கொண்டு சென்றுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



