லாரி கடக்க முயன்ற போது இரண்டாக உடைந்த பாலம்

காணொளிக் குறிப்பு, லாரி சென்றபோது இரண்டாக உடைந்த பாலம்
லாரி கடக்க முயன்ற போது இரண்டாக உடைந்த பாலம்
பிரசுரிக்கப்பட்டது

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டம் உன்னிஸ்பிசா கிராமத்தில் உள்ள பாலத்தின் வழியாக கனரக லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாகப் பாலம் இரண்டாக உடைந்து இடிந்து விழுந்தது. இதில் லாரியும் பாலத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பிடிஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு