குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்னிருந்து ரசிகர்களை சந்தித்த அமிதாப்

காணொளிக் குறிப்பு, குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின் இருந்து ரசிகர்களை சந்தித்த அமிதாப்
குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்னிருந்து ரசிகர்களை சந்தித்த அமிதாப்
பிரசுரிக்கப்பட்டது

நடிகர் அமிதாப் பச்சன், கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டு துளைக்காத கண்ணாடித் தடுப்புக்குப் பின்னால் நின்று தனது ரசிகர்களைச் சந்தித்தார்.

கடந்த வாரம் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பல ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது அவருக்குப் பின்னால் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனும் உடன் இருந்தார்.

மும்பையில் உள்ள தனது 'ஜல்சா' இல்லத்தின் முன்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரசிகர்களைச் சந்திப்தை அமிதாப் பச்சன் வழக்கமாக கொண்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு