பிரேசிலில் 4-வது முறையாக அதிபராகும் லுலா முன்னுள்ள முக்கிய சவால்

பிரேசிலில் 4-வது முறையாக அதிபராகும் லுலா முன்னுள்ள முக்கிய சவால்
பிரசுரிக்கப்பட்டது

பிரேசிலில் லுலா மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடிய தருணம் இது.

பிரேசிலின் தற்போதைய அதிபரும் மூத்த இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ( Luiz Inácio Lula da Silva) கடும் போட்டி நிலவிய தேர்தலில் வலதுசாரி போட்டியாளரான ஃபிளாவியோ போல்சனாரோவை (Flávio Bolsonaro) தோற்கடித்தார்.

லத்தீன் அமெரிக்காவில் நிலவி வரும் பரந்த அரசியல் போக்கிலிருந்தும் இடதுசாரித் தலைவரான லுலாவின் வெற்றி மாறுபட்டுள்ளது.

அதாவது அந்த பிராந்தியத்தில் வாக்காளர்கள் ஆளும் தலைவர்களுக்கு எதிராக வாக்களித்து, வலதுசாரி தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா போன்ற பெரிய நாடுகளில்கூட தற்போது பழமைவாத தலைவர்கள் ஆட்சி பொறுப்பில் உள்ளனர்.

பிரேசிலில் 4-வது முறையாக லுலா அதிபராக உள்ள நிலையில், 2027 ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கவுள்ள அவரது புதிய பதவிக்காலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடும் சவால்களுக்கு மத்தியில் அமையவுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இவருக்கு இருக்கும் பகைமையும் அதில் ஒன்றாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு