நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
#வாதம் விவாதம்: ''குஜராத் தேர்தல் முடிவு பா.ஜ.கவுக்கு ஒரு எச்சரிக்கை மணி''
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில், ''கடந்த தேர்தல்களை விட குறைந்த இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு இது எச்சரிக்கை மணியா? ஆட்சியை கைப்பற்ற கிடைத்த நல்ல வாய்ப்பை மீண்டும் நழுவவிட்டதா காங்கிரஸ்?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே...
''மோதிக்கு எச்சரிக்கை என்பதை விட காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முன்னோட்டம்'' என நமசிவாயம் கூறுகிறார்.
''திடீர் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறைப்பு; தேர்தல் அறிவிப்பு தள்ளிவைப்பு என அனைத்தையும் பயன்படுத்திய பாஜகவிற்கு மணிசங்கர் அய்யரின் பேச்சும், எப்போதும் போன்ற பாகிஸ்தான் கோஷமும் பெரும் வரபிரசாதமாக அமைந்தது'' என்கிறார் முருகன்.
''மக்களின் அதிருப்தி தெளிவாகப் பார்க்க முடிகிறது. இருப்பினும் அதனை சரிசெய்ய முடியும். குஜராத்தில் இந்த நிலை என்றால் பிற மாநிலத்தில் வெற்றிக்கு மிக மிக கடுமையாக உழைக்க வேண்டிய நிலை இருப்பதை பாஜக உணர வேண்டும். வரிகள் குறைப்பு சாமானிய மக்களுக்கு முற்றிலும் பயன் தரவில்லை'' என கருத்து தெரிவித்துள்ளார் சுப்ரமணியன்.
''பாஜகவுக்கு இந்த வெற்றி ஒரு வேகத்தடை, எச்சரிக்கை மணி'' என்கிறார் சரோஜா.
பிற செய்திகள்
- உலகின் மிகவும் ஆபத்தான இடத்திற்குச் சுற்றுலா செல்ல ஆசையா?
- LIVE: குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் அறுதி பெரும்பான்மை பெற்றது பாஜக
- பா.ஜ.கவின் வெற்றிக்கு ஹர்திக் படேல் சொல்லும் காரணம்?
- சினிமா விமர்சனம்: மாயவன்
- மும்பையில் பயங்கர தீ விபத்து – 12 பேர் உயிரிழப்பு
- ஆங் சாங் சூச்சி மீது, `இனப்படுகொலை` குற்றச்சாட்டு பாயக்கூடும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்