நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
கூகுள் சேவை: மொபைலில் பணம் செலுத்தும் செயலி இந்தியாவில் அறிமுகம்
ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் ஆகிய இரண்டிலும் வேலை செய்யும் மொபைல் மூலம் பணம் செலுத்தும் செயலியை கூகுள் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தேஜ் (Tez) செயலியானது, ஒருவருக்கொருவர் பணப் பரிமாற்றங்களை செய்துகொள்ளவும் மற்றும் கடைகளில் இருந்து நேரடியாகவும் மற்றும் மொபைல் வலைத்தளங்களில் இருந்தும் பொருட்களை வாங்க அனுமதிக்கிறது.
மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க, கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட, அரசாங்க ஆதரவு அமைப்பான, நாட்டின் ஒன்றிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payment Interface) தரநிலையை தேஜ் (Tez) அடிப்படையாகக் கொண்டது.
ஆனால், ஒரு பிரபலமான உள்ளூர் மொபைல் வாலட் அமைப்பான PayTM உடன் தேஜ் போட்டியிட வேண்டியிருக்கும்.
PayTM - ஜப்பான் நாட்டின் Softbank நிறுவனத்திற்கும் சீனாவின் அலிபாபா நிறுவனத்திற்கும் சொந்தமான PayTM - ஏற்கனவே நாட்டில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவு செய்த பயனர்களைக் கொண்டுள்ளது
எனினும், போட்டி அமைப்புகள் வெவ்வேறு அடிப்படையில் வேலை செய்கின்றன. தேஜ் (Tez) செயலியானது விரைவாக, ஹிந்தி மொழியிலே, ஒரு பயனரின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பெறுபவருக்கு பணம் அனுப்புகிறது, இதனால் வங்கி அட்டைக்கு மாற்றாக செயல்படுகிறது, இது Android Pay அல்லது Apple Pay க்கு ஒத்த முறையில் செயல்படுகிறது.
இதற்கு மாறாக, PayTM -அதாவது மொபைல் மூலம் பணம் செலுத்தும் செயலி என்பதை சுருக்கமாகாக் கொண்ட இது, முதலில் ஒரு மின்னணு பணப்பையில்(Electronic wallet) பணத்தை வைத்துக்கொண்டு பிறகு பணமில்லா பரிவர்த்தனை செய்ய பயன்படுகிறது.
2010 இல் தொடங்கப்பட்ட தேஜ் செயலியானது, பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, பல்வேறு வணிகர்களால் பணம் திரும்பப்பெறும் சலுகை மற்றும் பல சலுகைகளை தரும் நன்மையையும் பெற்றுள்ளது
டோமினோஸின் பிஸ்ஸா உணவகங்கள், ஜெட் ஏர்வேஸ், ரெட் பஸ் போக்குவரத்து நெட்வொர்க் மற்றும் - இந்தியாவின் மிகப்பெரிய சினிமா சங்கிலியான பி.வி.ஆர் சினிமாஸ் ஆகியவை மற்ற வெளியீட்டு பங்காளிகள் ஆகும்.
பணத்தை கீழ்காணும் பல்வேறு வழிகளில் செலுத்தலாம்:
- பெறுநரின் UPI எண், தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்.
- ஒரு "ரொக்க முறை" வழியாக,ஒரு குறுகிய ஒலி சமிக்ஞையை மற்றொரு அருகிலுள்ள தொலைபேசியில் அனுப்பவும். இது சிம்ப்ஸின் தொழில்நுட்பத்தை சற்றே ஒத்திருக்கும் ஒன்றாகும்.
- செயலியின் உட்கட்டமைக்கப்பட்டுள்ள வணிக "சேனல்களை" பயன்படுத்தி, அரட்டை செயலிகளில் தோன்றும் உரையாடல்கள் போல் ஒரே மாதிரியான கடை / சேவையை வகைப்படுத்தும்.
- இந்த வசதியைப் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் மூலமாகவும் பயன்படுத்தலாம்.
கட்டணம் இல்லாமல் கூகுள் இந்த சேவைகளை வழங்குகிறது. அடுத்த கட்டத்தில் கூடுதல் லாபம் ஈட்டும் செயல்பாடுகளை அது அறிமுகப்படுத்தலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
அமெரிக்க நிறுவனம், லாவா, மைக்ரோமேக்ஸ், நோக்கியா மற்றும் பானாசோனிக் ஆகியவற்றில் இருந்து புதிய கைபேசிகளில் விரைவில் தேஜ் நிறுவப்படும் என கூறியுள்ளது.
அதன் தத்தெடுப்பை மேலும் ஊக்கப்படுத்த, கூகுள் ஒரு பயன்பாட்டு ஸ்க்ராட்ச் கார்டை (scratch card) உள்ளடக்கியிருக்கிறது, இதில் ஒவ்வொரு முறையும் 50 ரூபாய்க்கு (78 சென்ட், 57p) மேல் வாங்கும் பயனர்கள் ஒரு பரிசு வென்றெடுக்க முடியும்.
இணைய தேடுபொறி ஜாம்பவானான கூகுள், PayTM மற்றும் அதை ஒத்த மின்னணு பணபரிமாற்ற செயலிகளை விட எளிமையானதாக இருக்கும் இந்த தேஜ் செயலியானது மக்களின் மக்களின் எதிர்பார்ப்பை பெறும் என்று எதிர்பார்க்கிறது.
"தேஜை பயன்படுத்த எவ்வித கட்டணமும் இல்லை, மற்றும் உங்களின் பணம் வங்கியிலேயே இருக்கும் என்பதால் மக்களின் ஆர்வத்தை பெறும்" என்று கூகுள் இந்தியாவின் இணையதள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எல்லாவற்றிற்கும் மேலாக, தேஜ் உங்களின் வங்கிக் கணக்குடன் நேரடியாக செயல்படுகிறது, எனவே பணத்தை இந்த செயலியில் கூட்டவோ அல்லது எடுப்பதற்கோ கட்டணம் செலுத்த வேண்டியதில்லை."
பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியிடமிருந்து விரைவில் போட்டி இருக்கும் என்று நாட்டின் பொருளாதார டைனமிக் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டிருக்கும் இது UPI- சார்ந்த சேவைகளை சேர்க்கும் என்று தெரிகிறது.
தேஜின் சேவையை அறிமுகப்படுத்திய உடன் பயன்படுத்திய பலர் அது குறைவான வேகமுடையதாக இருந்ததாக தெரிவித்தனர். இதற்கு "எதிர்பார்த்ததைவிட அதிகமான பயன்பாடே" காரணமென்று கூகுள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்