இடைக்கால தேர்தலில் பின்னடைவு - டிரம்ப் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
இடைக்கால தேர்தலில் பின்னடைவு - டிரம்ப் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காஅமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இடைக்காலத் தேர்தல் என்று அழைக்கப்படும் இதில் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் சூழலில் செனட் சபையையும் மீண்டும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் குறித்து தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப்

தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் ஒருவேளை போட்டியிட்டிருந்தால், தாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்போம் என்றும் கூறியுள்ளார்.

இதேபோல், டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தேர்தல் முடிவுகளைத் தாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு