ஆளுநர் பதவிக்கான தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்ட விவேக் ராமசாமி
ஆளுநர் பதவிக்கான தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்ட விவேக் ராமசாமி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் நடைபெற்ற ஓஹையோ மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஓஹையோ ஆளுநர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய விவேக் ராமசாமி, சில நிகழ்வுகள் குறிப்பிட்ட காரணத்திற்காகவே நடக்கின்றன என்று தான் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.
இறைவனுக்கு ஒரு திட்டம் உள்ளது என்றும், மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மிகச்சிறந்த நாட்கள் இன்னும் வரவிருக்கின்றன என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



