காணொளி: நீலகிரி மலை ரயில் சேவை பாதிப்பு - வெடிவைத்து தகர்க்கப்படும் பாறைகள்
காணொளி: நீலகிரி மலை ரயில் சேவை பாதிப்பு - வெடிவைத்து தகர்க்கப்படும் பாறைகள்
பிரசுரிக்கப்பட்டது
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலைரயில் பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டு சுமார் 12 நாட்களாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
கல்லார் ரயில்நிலையம் மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இருப்பு பாதையில் சரிந்து கிடக்கும் பாறைகளை வெடி வைத்து தகர்த்து அப்புறப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளது. சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே மலைரயில் சேவை மீண்டும் துவங்கும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



