'50 ஆண்டுகளில் சிறந்த அதிபர் நான் தான்' - டிரம்ப் பேச்சு
கடந்த 50 ஆண்டுகளில் தானே அமெரிக்காவின் சிறந்த அதிபர் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க இடைக்கால தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், "குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என எந்த கட்சியை சேர்ந்த அதிபராக இருந்தாலும், அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, நமக்கு அப்படிப்பட்டவர்கள் அதிகம் இருந்ததில்லை. கடந்த 50 ஆண்டுகளில் நமக்கு ஒரே ஒரு சிறந்த அதிபர் மட்டுமே இருந்தார். அவர் யார் என தெரியுமா? நான்தான்.
அப்படித்தான் சொல்கிறார்கள், ஆனால் நான் அதுக்குள் போக விரும்பவில்லை. நான் தன்னடக்கமாக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் (முந்தைய அதிபர்கள்) இடைத்தேர்தல்களில் சிறப்பாக செயல்படமாட்டார்கள். 25 தேர்தல்களில், இரண்டில் மட்டுமே வென்றிருக்கிறார்கள். இது அர்த்தமற்றது. நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி கிடைத்திருக்க வேண்டும், நாங்கள் அதை மாற்றி அமைக்கப் போகிறோம். " என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



