காணொளி: நீதிக்கான போராட்டத்தில் சந்தித்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள்

காணொளிக் குறிப்பு, நீதிக்கான போராட்டத்தில் சந்தித்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள்
காணொளி: நீதிக்கான போராட்டத்தில் சந்தித்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள்
பிரசுரிக்கப்பட்டது

இந்தோனீசியாவில் தாங்கள் படித்த உறைவிடப் பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை வெளிக்கொண்டு வந்த பிறகு நீதிக்காகப் போராடுகையில் ஜியாவும் யுஸ்ரோனும் காதலிக்கத் தொடங்கினர். இப்போது, ​​அவர்கள் திருமண பந்தத்தில் இணைகிறார்கள்.

இருவராலும் பெரிதும் மதிக்கப்பட்ட அவர்களின் முன்னாள் தலைமையாசிரியர் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக ஜியா யூஸ்ரோனிடம் கூறினார். இதையடுத்து யுஸ்ரோன் அதை விசாரிக்கத் தொடங்கினார்.

அவரால் தாங்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறிய மற்ற மாணவர்களையும் இருவரும் இணைந்து கண்டறிந்தனர்.

அவர்கள் மேற்கொண்ட விசாரணை பள்ளிக்குத் தெரியவந்த போது, ​​இருவரும் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டார்கள்.

இந்தச் சூழலை சேர்ந்து எதிர்கொண்டது அவர்களை மேலும் நெருக்கமாக்கியது. இறுதியில், ஜியாவுடன் இருப்பதற்காக யுஸ்ரோன் கெய்ரோவுக்குக் குடிபெயர்ந்தார்.

பல மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவர்களின் முன்னாள் தலைமையாசிரியரை காவல்துறையினர் அண்மையில் தடுத்து வைத்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு