காணொளி: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வித்தியாசமான உடையால் கவனம் ஈர்த்த மாடல்
காணொளி: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் வித்தியாசமான உடையால் கவனம் ஈர்த்த மாடல்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஹாலோவீன் விழாவில் பிரபல மாடலும் தொலைக்காட்சிப் பிரமுகருமான ஹெய்டி க்ளம் (Heidi Klum) அணிந்திருந்த வித்தியாசமான உடை அனைவரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. தனது இடது கையை மையமாகக் கொண்டு, உடலின் பெரும்பகுதி ஒரு பெரிய கையின் வடிவத்திற்குள் மறைக்கப்பட்டிருப்பது போன்ற விசித்திரமான உடையை அவர் அணிந்திருந்தார். தனது கற்பனைத் திறனுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த உடை சற்று வெப்பமாக உணரச் செய்தாலும், இந்த வித்தியாசமான வேடத்தில் வலம் வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வேடிக்கையான அனுபவமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



