அமெரிக்காவில் தனியார் ஜெட் விமான விபத்தில் 9 பேர் பலி
அமெரிக்காவில் தனியார் ஜெட் விமான விபத்தில் 9 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
நவம்பர் 1ஆம் தேதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் தனியார் ஜெட் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து புறப்பட்ட விமானம், பஹாமாஸ் தீவுகளுக்குச் சென்று கொண்டிருந்ததாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமானம் விழுந்த இடத்துக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்து சுமார் 600 பேர் வெளியேற்றப்பட்டு வருவதாக ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



