விளையாட்டு வீரர்களுக்கு விஜய் வழங்கிய ரூ.500 காசோலை பற்றிய விளக்கம்
நீங்கள் பார்க்கும் இந்த காட்சியில் முதலமைச்சர் விஜய் விளையாட்டு வீரர்களுக்கு 500 ரூபாய் காசோலை வழங்கும் காட்சி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. அது குறித்து என்னவென்று இந்த வீடியோவில் பார்க்கலாம்
முதலமைச்சர் கோப்பை 2026 பெயரில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது அதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
சென்னையில் அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவில், ஜப்பானில் நடந்த 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்களுக்கு, 6 கோடியே 85 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தான், விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு மேம்பாட்டு உதவித்தொகைத் திட்டத்தையும் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். அதன்படி, சிறப்புநிலை விளையாட்டு மைய விடுதிகளில் பயிற்சி பெறுவோருக்கு மாதம் 500 ரூபாயும், முதன்மை விளையாட்டு மைய விடுதிகளில் பயிற்சி பெறுவோருக்கு மாதம் 1,000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2,600 வீரர்களுக்கு ஆண்டுக்கு மொத்தம் ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



