உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் உயிரிழப்பு
உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது
உத்தராகண்டில் ஐந்து யாத்ரீகர்கள் உட்பட ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு அருகில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆறு பேரும் உயிரிழந்துவிட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை பிற்பகல் பத்ரிநாத்தில் இருந்து புறப்பட்டதாகவும், அதன் பிறகு அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதாகவும், தெளிவாக பார்க்க முடியாத சுழல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



