காணொளி: எரியும் தார் பீப்பாய்களுடன் ஊர்வலம் சென்ற மக்கள் - பின்னணி என்ன?
காணொளி: எரியும் தார் பீப்பாய்களுடன் ஊர்வலம் சென்ற மக்கள் - பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டனில் ஒட்டரி செயின்ட் மேரி நகரில் கடந்த 5ஆம் தேதி அன்று கிராமத்தினர் எரியும் பீப்பாய்களைத் தங்கள் தலைக்கு மேல் சுமந்து சென்று தங்களின் நூற்றாண்டு கால பாரம்பரியத்தை பின்பற்றினர்.
இந்த நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டிருந்தனர். எரியும் தார் பீப்பாய்களைச் சுமந்து செல்வது இந்த கிராமவாசிகளின் நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம் ஆகும்.
இந்த பாரம்பரியம் நாடாளுமன்றத்தை தகர்க்கும் தோல்வியுற்ற முயற்சியான 1605ஆம் ஆண்டின் கன்ப்பவுடர் சதித்திட்டத்தின் (Gunpowder Plot) காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது .
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



