காணொளி: வெற்றிப் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்துகளுக்கு பாதிப்பா? பிபிசி கள ஆய்வு

காணொளிக் குறிப்பு,
காணொளி: வெற்றிப் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்துகளுக்கு பாதிப்பா? பிபிசி கள ஆய்வு
பிரசுரிக்கப்பட்டது

கடந்த 2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் விடியல் பயணம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஏற்கனவே அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மகளிருக்கு கட்டணமில்லா பயணங்களை நகரப் பேருந்துகளில் மட்டும் அனுமதித்தது.தாழ்தள சொகுசு பேருந்துகளில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் வெளியூர் பேருந்துகளில் மகளிருக்கும் ஆண்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் முறை இருந்தது.

கடந்த 2026 ஏப்ரலில் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்தபின்பு வெற்றிப் பயணம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தில் பெண் அல்லது திருநர் 80 கிலோமீட்டர் வரை இலவசமாக பயணம் செய்ய முடியும். அதற்கு மேல் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரு பேருந்தில் செல்வதாக இருந்தாலும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அரசு ஏசி பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இத்திட்டம் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் நகரப் பகுதியில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்துக்குள் உள்ள மற்ற வெளியூர்களுக்கு கட்டணமின்றி மகளிர் பயணம் செய்யலாம். எந்த ஊருக்கு எவ்வளவு தூரம் என்பதை அறியாத நிலையில் வெற்றிப் பயணம் என்ற ஸ்டிக்கரை வைத்து கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்பட்ட பேருந்துகளை பெண்கள் அறிந்து கொள்ளலாம்.

இத்திட்டத்தால் அருகருகே உள்ள இரு நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் நிலையை அறிவதற்காக பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு