காணொளி: வாகனங்களின் உள்ளே புகுந்து போக்கு காட்டிய கொம்பேறி மூக்கன் பாம்பு
காணொளி: வாகனங்களின் உள்ளே புகுந்து போக்கு காட்டிய கொம்பேறி மூக்கன் பாம்பு
பிரசுரிக்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் கீழ ராஜ வீதியில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள் கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று புகுந்தது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர், பொதுமக்களின் உதவியுடன் பாம்பைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது, அவர்களிடம் சிக்காமல் தப்பித்த பாம்பு, மற்றொரு இருசக்கர வாகனத்திற்குள் புகுந்தது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகும் பாம்பைப் பிடிக்க முடியாததால், பாம்பு புகுந்திருந்த இருசக்கர வாகனம் அருகிலுள்ள மெக்கானிக் கடைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின் அங்கு பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



