தென் அமெரிக்க நாடான சிலியில் மாணவர்கள் போராட்டம் ஏன்?

காணொளிக் குறிப்பு, பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு; சிலியில் மாணவர்கள் போராட்டம்
தென் அமெரிக்க நாடான சிலியில் மாணவர்கள் போராட்டம் ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த நவம்பர் 5, வியாழக்கிழமை, சிலி தலைநகர் சாண்டியாகோவில் மாணவர்கள் காவல்துறையினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் தண்டிக்கப்பட்டவர்களின் சிறைத் தண்டனையைக் குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதித்துறை அமைச்சர் ஃபெர்னாண்டோ ரபாட் பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியும் அவர்களைக் கலைக்க முயன்றனர். பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களின் சிறைத் தண்டனையைக் குறைக்கும் வகையில் அரசு 56 உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த முடிவுகளுக்கு ஆதரவாகப் பேசிய அமைச்சர் ரபாட், சட்டத்தின்படியும் உச்ச நீதிமன்றத்தின் ஆதரவுடனும் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு