பெரியார் அறிவுலகம்: பெருமாள் முமுருகன் குற்றச்சாட்டு பற்றி தவெக, திமுக கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, பெரியார் அறிவுலக நூலக சர்ச்சை ஏன்?
பெரியார் அறிவுலகம்: பெருமாள் முமுருகன் குற்றச்சாட்டு பற்றி தவெக, திமுக கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கோவையில் 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்தை கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மாதம் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த நிலையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நவம்பர் 4 ஆம் தேதி பார்வையிட்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "பெரியார் அறிவுலகத்தில் தொண்ணூற்று ஒன்பதே முக்கால் சதவீதம் பணிகள் முடிந்ததால் தப்பித்தது. இல்லையென்றால் ஆளும் அரசால் மூடுவிழா கண்டிருக்கும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் புதிய நூலங்கங்களுக்கு நூல்கள் பரிந்துரை செய்யும் குழுவில் இடம்பெற்று இருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.

திமுக ஆட்சி காலத்தில் கோவை பெரியார் அறிவுலகம் உட்பட பல்வேறு நூலகங்களுக்கு புதிய நூல்களை வாங்குவதற்கான கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பெருமாள் முருகன் வைத்துள்ள குற்றசாட்டை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய திமுக உயர் ரகம்தான் என்று முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பெரியார் பெயரில் ஊழல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் முறைப்படி விசாரணை நடந்த உத்தரவிடப் போவதாக ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

திமுக தரப்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் தள பதிவில் பெரியார் அறிவுலகத்துக்காக 'போலி புத்தகங்கள்' வாங்கப்பட்டது எப்போது? என்றும் போலி புத்தகங்களில் போலியான புத்தகங்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு