காணொளி: 'சிவப்புக்கு பதில் நீலம்' - நிறம் பார்த்து பைக் திருடிய நபர்
காணொளி: 'சிவப்புக்கு பதில் நீலம்' - நிறம் பார்த்து பைக் திருடிய நபர்
பிரசுரிக்கப்பட்டது
கோவை பீளமேட்டில், சிவப்பு நிற R15 பைக்கைத் திருடிய நபர், அதன் நிறம் பிடிக்காததால் அதை வேறொரு வீட்டின் முன்பு விட்டுவிட்டு, அங்கிருந்த நீல நிற R15 பைக்கைத் திருடிச் சென்றுள்ளார். அதிகாலை 3.15 மணிக்கு சிவப்பு பைக்கையும், 3.30 மணிக்கு நீல பைக்கையும் திருடியதாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலையில் பைக் உரிமையாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



