காணொளி: போர்ச்சுகல் கால்பந்து அணியில் இருந்து ரொனால்டோ ஓய்வு
காணொளி: போர்ச்சுகல் கால்பந்து அணியில் இருந்து ரொனால்டோ ஓய்வு
பிரசுரிக்கப்பட்டது
போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
41 வயதான ரொனால்டோ, 2003-ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானது முதல் தனது நாட்டுக்காக 146 கோல்கள் அடித்துள்ளார். 234 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவை இரண்டுமே உலக சாதனைகளாகும்.
"போர்ச்சுகல் மக்களே, நமது தேசிய அணியின் ஏழாம் எண் ஜெர்சியைத் திருப்பிக் கொடுக்கும் நாள் வந்துவிட்டது" என்று ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் காணொளியில் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



